வண்ணத்து பூச்சிகளை
மைதானத்தில் நிரப்பி விடுகிறாள்
அந்த குழந்தையின் வருகை
அவள் சிணுங்களில்
பல பூக்கள்
மைதானத்தில் சிதறி விடுகின்றன
எல்லாவற்றை சொல்லி விட்டு
முதலில் இருந்து சொல்லுகிறேன்
என்கிற சுவாரசியம் திரைபடங்களில்
கூட இருப்பதில்லை
வானத்தில் துளி சிந்தாத
மழை
மழலை அழுகை
கூப்பிடுகையில் வரமாட்டேன்
என நீ துள்ளி ஓடுகையில்
மான்குட்டி அழகு
தோற்றுவிடுகிறது
அவள் பேசுகையில்
சாக்லேட் பாய் இனிப்பாய்
ஏதும் தெரியாமயாய்
கரைந்து வரும் கணங்கள்
கோடுகள் இல்லாமல்
பல ஓவியங்கள் உனது
முகங்களின் உதடு சுழிக்கும்
தருணங்களில்
உனக்காகவே எல்லா விதி
மாற்றப்படுகிறது...

